ராம்சரண், ஜூனியர் என்டிஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அண்மையில் ஆர்ஆர்ஆர் படத்துக்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார்.
இந்த நிலையில் ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் “ராஜமவுலி அவர்கள் இந்த உலகையே வெல்லப்போகிறார். விருதுகளை வென்ற ராஜமவுலிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளை பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு இயக்குனர் ராஜமவுலி “தேங்க்யூ டார்லிங். எனது சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாதபோது நீங்கள் நம்பினீர்கள்” என பதில் அளித்துள்ளார்.