Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யயோ….! “பிரபல நடிகரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி”…. வெளியான அடுத்த படத்தின் அப்டேட்….!!!

ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபல மடைந்தவர் ராஜமௌலி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் வரும் 25ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

இதனை தொடர்ந்து ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் திடீரென மகேஷ்பாபுவின் படம் தள்ளி போவதாகவும், அல்லு அர்ஜுன் வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இது குறித்து ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தின் புரமோஷனுக்காக கர்நாடகா சென்ற பொது  பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். மேலும் ஆர் ஆர் ஆர் படத்தை போன்று இந்த படமும் பல கதாநாயகர்கள் நடிக்கும் படமாக இருக்காது மகேஷ்பாபு மட்டும் நடிக்கும் படமாக இருக்கும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Categories

Tech |