Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது .

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 என்ற பிரமாண்ட படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ (ரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் முதல் முறையாக ராம் சரணும் ,ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கின்றனர் . இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆரும் ,ராஜமௌலியும் மூன்று படங்களில் இணைந்துள்ளனர் ‌. மகதீராவுக்குப் பிறகு ராம் சரணும் ராஜமௌலியும் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் ,ஆலியா பட், ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் ,சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர் .

Image result for rrr

‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் கதை அல்லுரி சீதாராமராஜு , கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்க்கையை முன்வைத்து உருவாகிறது . தமிழ் ,ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வருகிற அக்டோபர் 13 அன்று வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை  லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |