ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ,ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளார்.
ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ,இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் .இவருக்கு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் கையில் காயம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் சிகிச்சைக்குப் பின் அவர் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் ராஜஸ்தான் அணியில் ,இறுதிக்கட்ட போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ,இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் ஜோப்ரா பங்கேற்க மாட்டார் ,என்று அறிவித்துள்ளது . ஜோப்ராஅடுத்த வாரத்திலிருந்து, சுஸ்செஸ் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்வதாகவும் ,பயிற்சியின்போது நன்றாக பவுலிங் செய்தால் ,2 வாரத்திற்கு பின் அணியுடன் இணைவார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த போட்டியில் விளையாடுவார் என்று ,பின்னர்தான் அறிவிக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.