ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 1600 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு மக்களை பெரிதும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் நாடு முழுவதும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த கொரோனா தொற்றினால் நாளுக்கு நாள் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 1,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்கு பின்பு 1,956 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 16 முதல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.