Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக ஆடி… “தோனி போல பினிஷ் பண்ணுவேன்”… தூக்கி எறிந்த பஞ்சாப்… சபதம் எடுத்த மில்லர்..!!

தோனியை போன்று செயல்படுவேன் என்று ராஜஸ்தான் அணி வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்..

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்.. இவர் சர்வதேச போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.. அதுமட்டுமில்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் ரசிகர்களையும் தன் பக்கம் வைத்துள்ளார்.. ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளாகவே அவரது ஆட்டம் மிகவும் மோசமாகவே இருக்கிறது.. பழைய அதிரடி ஆட்டத்தை காண முடியவில்லை..

அதனால் பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட்டார் மில்லர்.. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.. எனவே இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.. இந்த முறை ராஜஸ்தான் அணி களமிறங்கி தனது ஆட்டத்தை சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைக்கிறார்..

 

இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்தும், எப்படி விளையாடுவது என்பது குறித்தும் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, தோனி எப்படி தனது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறாரோ, அதே போல நானும் செய்ய விரும்புகிறேன்.. அவர் மிகவும் அமைதியாக இருந்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றிபெற நினைக்கின்றார்.. நான் அவரைப் போலவே செயல்பட விரும்புகின்றேன்.. ஏனென்றால் அவர் தன்னை சித்தரிக்கும் விதம் மிகவும் சிறந்தது என்றார்..


மேலும் டோனி போன்றே சிறப்பாக ஆடி அவரை போன்றே பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து நானும் ஒரு சிறந்த பினிஷராக வரவேண்டும் என்று நினைக்கின்றேன்.. தோனியை போன்று பேட்டிங் செய்வதை விடவும் சேஸிங்கில் அவரது நுணுக்கங்களை பின் தொடர்ந்து அவரை போலவே வெற்றிகரமாக போட்டியை பினிஷிங் செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்..

Categories

Tech |