Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்….. கொல்கத்தா தொடர்ந்து 6வது தோல்வி.!!

கொல்கத்தா அணியை  3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது     

ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் யாரும் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை.

Seithi Solaiகேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 சிக்ஸர், 7 பவுண்டரி) விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக வருண் ஆரோன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும்  தாமஸ், ஷ்ரேயஸ் கோபால், உனத்கட் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Image

இதையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கியே ரஹானேவும் ,சஞ்சு சாம்சனும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பிறகு ரஹானே 34 (21) ரன்களிலும், சாம்சன் 22 (15) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 2, பென் ஸ்டோக்ஸ் 11,  ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னிலும் நடையை கட்டினர்.

Image

இதையடுத்து ரியான் பராக்கும், ஷ்ரேயஸ் கோபாலும்  இணைந்தனர். ரியான் பராக் பொறுப்புடன் விளையாடினார். ஷ்ரேயஸ் கோபால் அதிரடியாக விளையாடி 18 ( 9) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரியான் பராக்குடன் ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்தார். இருவரும் கடைசியில் அதிரடி காட்டினர். அதன் பிறகு ரஸெல் வீசிய 19 ஓவரில் பராக் 31 பந்துகள் 47 ரன்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரி)  ஆட்டமிழந்தார்.

Image

கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் 4,6 என அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இறுதியில் 19.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்ச்சர் 27*(12) ரன்களிலும், உனத்கட் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகளும், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, ஆண்ட்ரே ரஸெல் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். கொல்கத்தா அணிக்கு  இந்த தோல்வியுடன் சேர்த்து தொடர்ந்து 6வது தோல்வியாகும்.

 

 

 

Categories

Tech |