Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது..!!

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தத. 

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் முன்னாள் துணை முதலமைச்சர் திரு. சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுவடைந்ததை அடுத்து, திரு. சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்தும்  நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டின்  ஆதரவாளர்களாக 18 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரஸ் அரசு கவிழக்கூடிய ஆபத்து ஏற்பட்டது. இந்த சிக்கலான சூழ்நிலையில்  அண்மையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் திரு. ராகுல் காந்தியை டெல்லியில் சச்சின் பைலட்  சந்தித்துப் பேசியதை அடுத்து, அவரும் அவரது தலைமையிலான அதிருப்தி எம். எல். ஏக்களும் மீண்டும் காங்கிரசுக்கு திரும்புவதற்கான சமரச திட்டம் உருவானது.

இதனையடுத்து திரு. அசோக் கெலாட்  தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் அரசு சார்பாக நேற்று கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட  குரல் வாக்கெடுப்பில், முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் தனது அரசை கவிழ்ப்பதற்கு பாரதிய ஜனதா அரசு மீண்டும் முயன்று வந்ததாக குற்றம் சாட்டினார். உட்கட்சி பூசலாதான் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டதாக, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தெரிவித்தது. இந்த விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசிய திரு. சச்சின் பைலட் கட்சிக்காக தான் போராடப் போவதாக தெரிவித்தார். பின்னர் சட்டப்பேரவை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |