Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராஜவாய்க்காலில் அடைப்பு வெள்ள நீர் புகுந்தது வீடுகளுக்குள் வந்தால் பொதுமக்கள் அவதி..!!

கோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நிலையில் முத்தண்ணன் குளத்தில் உபரி நீர் ராஜ வாய்க்கால் வழியாக செல்வ சிந்தாமணி குலத்திற்கு சென்றது.

ஆனால் ராஜ வாய்க்காலில்  அடைப்பு  ஏற்பட்டதால் பொண்ணையராஜபுரம் அருகேயுள்ள பழனிசாமி காலனிக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாநகர ஆட்சி அலுவலர்கள் ராஜவாய்க்காலில் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |