Categories
அரசியல்

இந்தா வந்துட்டாருல்ல நம்ம தலைவரு….! திரளாக குவிந்த கூட்டம்…. களைகட்டிய சிறை வளாகம்….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கில், சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தனிப்படை காவல்துறையினரால் கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தனிப்படை காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ராஜேந்திரபாலாஜியை அங்கு அழைத்து வருகிறார்கள் என்பதை அறிந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரான, எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் கூட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து ராஜேந்திரபாலாஜியிடம் மூன்று மணிநேரங்கள் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பிறகு, குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியான பரம்வீர், முன்பு ராஜேந்திரபாலாஜியை  அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிபதி, ராஜேந்திரபாலாஜிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |