மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர்.
அதே போல கட்சியின் அமைப்பு நிர்வாகத்தை விரைவு படுத்துவதற்கு 8 மண்டலமாக பிரிக்கப்படு 16 மாநில செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்தது. இந்நிலையில் கமலின் கட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் , கமலின் கட்சி மழையில் முளைத்த காளான் போன்றது. அந்த கட்சிக்கு என்று கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை என்று விமர்சித்தார்.