ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமலிங்க விலாசம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் ராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் திருவிழா மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போலவே மன்னர் காலம் முதல் தற்போது வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்சவமூர்த்திகளும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மகர் நோன்பு திடலை அடைவர். பின்பு அங்கு ராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேவியின் ஆசியை பெற்று செல்வார்கள்.