Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

‘ரஜினி 70’ – வாழ்த்து மழையில் நனைய வைத்த பிரபலங்கள்….!!

நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல்வேறு இடங்களிலும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், கோயில்களில் சிறப்பு வழிபாடு என ரசிகர்கள் உலக அளவில் ரஜினி பிறந்தநாளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

இதே போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், நல்ல உடல் – மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் மேலும் பல வெற்றிகள் காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி வாழ்த்து…

இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து..

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்து..

நடிகர் தனுஷ் வாழ்த்து..

நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து..

நடிகர் அருண்விஜய் வாழ்த்து…

நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து..

இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து..

நடிகர் பார்த்திபன் வாழ்த்து..

நடிகர் விக்ரம் பிரபு வாழ்த்து..

நடிகர் சூரி வாழ்த்து..

இதே போன்று ரஜினிக்கு நெருங்கிய பலரும், தொலைபேசியில் தொடர்புகொண்டும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |