கொரோனா குறித்து பேசும் முன் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைப்புகள் நட்சத்திரங்களுக்கு வலியுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவோர் மீது சுகாதார அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நட்சத்திரங்களும் கொரோனா குறித்து அவ்வப்போது தவறான செய்திகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில்கூட ரஜினி, அமிதாப் ஆகியோர் கொரோனா குறித்து பேசியது தவறான செய்தி என்பதால் அதனை நீக்கியது. இது குறித்து தெரிவிக்கையில், பிரபலங்களாகிய நம்மை பல்வேறு மக்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இது போன்ற தவறான செய்தியை கூறுவது நல்லதல்ல. நமக்கு பொறுப்பு இருக்கிறது என்று நட்சத்திரங்களுக்கு சுகாதார அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.