கமலும், ரஜினியும் கூட்டணி அமைத்து விட்டால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா திரையுலகின் பிரபல நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றார், அதேபோல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதற்கான யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் அதேபோன்று புரட்சி ஏற்படும் காலம் வரும்போது தன் கட்சி வருமென்றும், அப்படி வரும் பட்சத்தில் முதல்வர் பதவி தனக்கு வேண்டாம்.
கட்சி வேறு, ஆட்சி வேறு. கட்சியை நான் பார்த்துக்கொள்வேன். ஆட்சியை வேறு ஒருவர் பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார். தற்போது ரஜினியும், கமலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்தால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் என மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்பது தங்களின் எண்ணம் எனவும், ரஜினியின் ஆன்மீக அரசியலை மக்கள் நீதி மய்யம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.