ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவிடம் சூப்பர் ஸ்டார் மன்னிப்பு கேட்டதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸ்டாண்ட் மாஸ்டர் சில்வா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாருடன் இருந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அதில் ” முதல் முதலில் சிவாஜி பட சூட்டிங்கில் தான் ரஜினி சாரை பார்த்தேன். அப்போது அசிஸ்டெண்ட் ஆக இருந்தேன். அவருடைய சண்டைக்காட்சிகளை அதிகம் சிரமப்படாமல், படமாக செய்வார். திரையில் அசாதாரணமாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர். மிகப் பெரிய ஸ்டாராக இருந்தாலும் சக ஊழியர்களுக்கு முதல் கைத்தட்டல் அவரிடமிருந்து தான் கிடைக்கும். 2.0 படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நான் பணியாற்றினேன். சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின் போது அவருடைய காலில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
ஷங்கர் சாரும் மருத்துவமனைக்கு முதலில் போக சொன்னார். ஆனால் அவர் சூட்டிங்கை முடித்து விட்டு போகலாம் என கூறிவிட்டார். பின்பு மருத்துவமனைக்கு சென்று இரண்டு மூன்று தையல்கள் போடும்படி இருந்தது. மீண்டும் சூட்டிங் வந்து ரஜினி சார் என்னை அழைத்து, நான் மருத்துவமனைக்கு சொன்னதை கேட்காது இதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த பெரிய நட்சத்திரங்களும் இதை செய்வார்களா? அவருடைய இரக்க குணமும் கருணை குணமும் அவரை எப்பொழுதும் தனித்து நிற்க செய்கிறது. அவரைப் போல் ஒருவரை நான் பார்த்ததில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.