பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினியை தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடந்த 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். முக்கியமானவர்கள் லிஸ்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட். இந்த கூட்டம் கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடுதான் ரஜினியை திடீரென அதிமுக அமைச்சர்கள் தாக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்கிறார் மூத்த நிர்வாகி.
மேலும் கூறுகையில் அதிமுகவை விட்டு விலக பாஜக ஆரம்பிக்கிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெற்ற இருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக , அதிமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊழல் வழக்கில் உள்ள தமிழக தமிழக அமைச்சர்கள் மீது கை வைக்க பாஜக முடிவு செய்திருக்கிறது.
இதன் முதல் பலியாக சுகாதாரத்துறை அமைச்சர் இருக்கலாம். பாஜகவின் இந்த திட்டத்தை தெரிந்து கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக நம்மை அடிக்க தொடங்கும் முன்பு நாம் அவர்களை அடிக்க ஆரம்பித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து பாஜகவை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள் என பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
மேலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாஜகவை விமர்சியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக தான் பெரியார் பெயரை சொல்லி ரஜினியை அதிமுக அமைச்சர்கள் தக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் புலம்பி வருகின்றது.