ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இவர் 30 கோடி ரூபாய் வரை தனது சம்பளத்தை குறைத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.