Categories
அரசியல் மாநில செய்திகள்

இரையாகிறாதீங்க….. ”பெரியார் வாழ்க’ னு சொல்வீங்க” ரஜினிக்கு திருமா அட்வைஸ் …!!

பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், பெரியாரை சீண்டிப் பார்த்து வீழ்த்த கணக்கு போட்டால் அது தப்புக் கணக்காக ஆகிவிடும். சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலுக்கு அவர் இரையாகி விடக் கூடாது என்பதுதான் என் கருத்து. பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரண் அடைந்து இருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.பெரியார் வாழ்க என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |