Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜெயிலர்” படப்பிடிப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினி புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு காரில் சென்றபோது இவரின் ரசிகர்கள் இவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கு நடிகர் ரஜினி தனது காரின் கண்ணாடியை கீழிறக்கி ரசிகர்களை பார்த்து கையாசைத்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |