ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடித்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.
அதன்பிறகு அவர் மீண்டும் திரும்பியவுடன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை முன்னணி நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.