ரஜினியின் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் காட்சியை தொடங்கப் போவது இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
உடல்நிலை காரணமாக கட்சி தொடங்குவது இல்லை என்று ரஜினி அறிவித்ததையடுத்து அவருடைய ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய தலைவர் உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று நினைக்காதவர்கள் உண்மையாகவே ரசிகர்கள் தானா? இல்லை இவர்களை யாராவது இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே ரஜினி உண்மையாகவே பாவம் தான்.