துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல அரசியல் கட்சியின் தவைவர்கள் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். இதனால் தற்போது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும் நடன இயக்குநரும் ரஜினியின் ரசிகருமான ராகாவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம்! எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.
அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது” திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! அன்புடன்…. “ராகவா லாரன்ஸ்” என்று கூறியுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) January 23, 2020