Categories
மாநில செய்திகள்

‘அரசியலில் ரஜினி ஒரு கேம் சேஞ்சராக இருப்பார்’ – சீனிவாசன்

கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் எனத் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது தேசபக்தி உள்ளவர்கள், தேசிய சிந்தனை உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ப. சிதம்பரத்திடம் சென்று கருத்துக் கேட்க வேண்டிய அவசியம் ரஜினிகாந்திற்கு இல்லை. ரஜினி சிதம்பரத்திடம் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுப‌ட்டுள்ள‌வ‌ர்க‌ளை, க‌டுமையாக‌த் த‌ண்டிக்க‌ வேண்டும். குடியுரிமை திருத்தச் ச‌ட்ட‌த்தால் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எந்த‌வித‌ பாதிப்பும் இல்லை.

இது குறித்த தெளிவான விள‌க்க‌த்தை பிர‌த‌ம‌ர் மோடி ஏற்கனவே தெளிவாக‌க் கூறிவிட்டார். த‌மிழ்நாட்டில் வ‌ரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ச‌ட்ட‌ப்பேரவைத் தேர்த‌லில் தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சிகளில் ஒன்றாக பாஜ‌க‌ இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், கொடைக்கான‌லில் அமைந்துள்ள‌ சேக் அப்துல்லா மாளிகையின் பெயரை, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா மாளிகை என பெய‌ர் மாற்ற‌ம் செய்ய‌ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |