ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று ரஜினி கூறியது மகிழ்ச்சியளிப்பதாக கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி காந்த், காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் என நான் நினைப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவி விலகுவதாக அறிவித்தார். அவர் பதவி விலக கூடாது. அவர் நின்று நிரூபித்து காட்ட வேண்டும். ஆளும் கட்சியை போல எதிர் கட்சியும் முக்கியம் என்பதால் அவர் பதவி விலக கூடாது என்று கூறினார். இந்நிலையில் ரஜினிகாந்த், ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்று கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.