Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி கட்சி தொடங்க வேண்டும்… ரசிகர்கள் தீவிர பிராத்தனை…!!!

ரஜினி உடல் நிலை கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து அவர் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்து கடவுளை வேண்டுகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். மக்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்கி மக்களுக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது ரஜினி கட்சி தொடங்காத தான் மிகவும் கவலையில் உள்ளனர்.

ஆகையால் அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரவேண்டும் என்று பொதுமக்கள் அவரது வீட்டின் முன்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமின்றி ஆற்காடு அடுத்த வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோவில் முன்பு ரஜினி பூரண உடல்நலம் பெற்று அவர் கூடிய விரைவில் அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்து கடவுளை வேண்டினர். கோவிலில் ரஜினி பூரண குணமடைய வேண்டும் என்று சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.

Categories

Tech |