ரஜினி_யின் அரசியல் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவாக தயாராகி வருவதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
நான் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள் என்று அடுக்கடுக்கான வசனங்களுடன் அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடுட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினியின் உத்தரவின் பேரில் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை சுமார் 70 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொருப்பாளர்கள் என 2 லட்சம் நிர்வாகிகள் இருப்பதாகவும் ரஜினி மன்றத்தினர் தெரிவிக்கின்றனர்.தற்போது நடிகர் ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்த்தில் நடித்து வரும் தர்பார் பொங்கலுக்கு வெளியாகுமென எதிர்பாக்கும் நிலையில் இதற்கடுத்த படமாக இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் ரஜினி அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
2021_ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி நிச்சயமாக போட்டியிடும் என்பதால்அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சியை பதிவு செய்யும் பணிகள் துவங்கவிருப்பதாக தெரிகின்றது.மேலும் ரஜினியின் புதிய கட்சியில் அதிமுக, திமுக_வின் சில மூத்த தலைவர்கள் இணையவுள்ளதாகவும் பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் பொறுப்புக்கு தலைமை ஏற்க ரஜினி நிராகரித்து விட்டதாகவும் , ரஜினி அரசியல் அறிவிப்பை வெயிட ராகவேந்திரா மண்டபத்தையே கட்சி அலுவலகமாக மாற்றவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.