ரஜினிகாந்த் நடக்காததை நடந்ததாக சொல்லி மதகலவரத்தை தூண்டுகிறார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் , தமிழ் சமுகம் மிகப் பெரும் இன்னல்களை துன்பங்களை , துயரங்களை சந்தித்து வருகிறது.ஆனால் இதையெல்லாம் பற்றி ரஜினிகாந்த் எப்போதும் திருவாய் மலர மறுக்கிறார். ஜிஎஸ்டி கொண்டு வந்திருக்காங்க கொண்டு வந்திருக்காங்க , என் ஆர் சி , என் பி ஆர் , தமிழில் குடமுழுக்கு இல்லை , பேரறிவாளன் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தாமதம் , கச்சத்தீவை மீட்க முடியல , ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கிடைக்க வில்லை , நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை ஹைட்ரோகார்பன் குறித்து ரஜினின் கருத்து என்ன ?
இதையெல்லாம் விட்டுவிட்டு 1971_ஆம் ஆண்டு நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக சொல்லி இந்து மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார். இங்கு கிறிஸ்துவர்கள் ,முஸ்லிம்கள் அண்ணன் – தம்பி , மாமன் – மச்சான் என்று ஒரு தாய் பிள்ளைகளாக இருக்கின்றோம் , எந்தவித வேறுபாடுமின்றி வாழ்ந்து வருகின்றோம்.தமிழ்நாட்டில் ஒரு கலவரத்தை செய்வதற்கு RSS நினைக்கும் திட்டத்தை தான் ரஜினிகாந்த் அவர்களின் வெளிப்படுத்துகிறார். ரஜினிகாந்த் போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் வீசிய வலையில் விழுந்து விட்டார் என்று வேல்முருகன் விமர்சித்தார்.