ரஜினிகாந்த், பா.ஜனதாவுக்கு பயந்து அரசியலில் இருந்து விலக வில்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை குஷ்பூ, சாய் தயாரித்துள்ள மாயத்திரை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷ்பு பேசியதாவது, ரஜினிகாந்த் அரசியலுக்கு பா.ஜனதா சொல்லித்தான் வந்ததாகவும், தற்போது பா.ஜனதாவுக்கு பயந்து அரசியலைவிட்டு விலகினார் என்றும் தவறான வதந்திகள் பரவி வருகிறது.பா.ஜனதாவுக்கு பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலக வில்லை.
அதுமட்டுமின்றி அவர் யாருக்கும் பயப்படும் நபரும் இல்லை. எது சரி,எது தவறு என்பதை அவர் நன்கு உணர்வார். அதனால் அரசியலுக்கு வருகிறேன் என்று அவரேதான் முடிவு செய்து சொன்னார். தற்போது அவருக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார்.
இதில் பா.ஜனதாவுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. பா.ஜனதாவை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலில் தனியாகவோ அல்லது இணைந்தோ செயல்படலாம். என்று கூறினார்.