Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாவட்ட செயலர் முகவரியில் ரஜினி கட்சி – வெளியான பரபரப்பு தகவல் …!!

ரஜினியின் மக்கள் சேவை கட்சியின் தலைமையகம் என மாவட்ட செயலாளர் வீட்டு முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடுவார் எனவும் சொல்லி இருந்தார். இதில் கட்சியை எந்த நாளில் ? எந்த ஊரில் தொடங்குவது ? என்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என கருதப்படுகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் சேவை கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் சேவை கட்சியின் தலைமை அலுவலகம் என்பது எண்ணுரில் உள்ள பாலாஜி நகர் நம்பர் 10 என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த முகவரியில் உள்ளது தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ள ஸ்டாலின் என தெரியவந்துள்ளது. இவர் ரஜினியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையின் போது கூட தமிழகத்திலேயே தூத்துக்குடியில் இவர் தான் அதிகமாக உறுப்பினர் சேர்த்துள்ளார்.  ரஜினி பெயரில் மக்கள் சேவை கட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது இவருடைய வீட்டின் முகவரியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |