ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல் கொள்கை சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக அரசியலையும் , ராஜராஜ சோழனுடைய ஆன்மீக அரசியலை கொண்டது. ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும். ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது , நீதி ,நேர்மை , தர்மத்திற்கு உட்பட்டது தான் ராஜராஜ சோழனின் ஆட்சி.
தொடர்ந்து பேசிய அவர் , ராஜராஜ சோழன் ஆட்சியில் அணைகள் கட்டப்பட்டது, விவசாயம் செழித்தது , கலைகள் செழித்தது. ஆன்மீக ஆட்சி என்பது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சி. இவர்கள் எல்லாம் ராஜராஜ சோழ ஆட்சி மேலே சாதி மத முத்திரைகளை குத்த விரும்புகிறார்கள். நிச்சயமாக ரஜினிகாந்த் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் .