நடிகர் காளிதாஸ் நடிக்கும் புதிய படத்தில் ரஜினியின் ரசிகனாக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ். இவர் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் ஆவார். இவர் நடித்த புத்தம் புது காலை, பாவ கதைகள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதை தொடர்ந்து காளிதாஸ் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வினில் வர்கீஸ் இயக்கும் இப்படத்தில் காளிதாஸ்க்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ரஜினியின் தீவிர ரசிகராக நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
ஆனால் தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற தலைப்பில் படம் உருவாகி வருவதால் மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ரஜினி ரசிகன்’ என்று பெயர் மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.