ரஜினி மற்றும் கமலை பார்க்க கூட்டம் மட்டும் தான் வரும் அது ஓட்டாக மாறாது என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் ரஜினிக்கு தற்போது முழு ஓய்வு தேவை என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது அவருடைய கட்சியின் அறிவிப்பை பாதிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் அவர்களின் மகன் விஜய் வசந்த் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அதில், “ரஜினி மற்றும் கமல் பிரச்சாரம் செய்ய வரும்போது அவர்களை பார்க்க கூட்டம் தான் வரும். அது ஓட்டாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும், ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு தற்போது நேரம் சரியில்லை” என்றும் விமர்சனம் செய்துள்ளார்.