நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் நினைவுகளை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் துள்ளிக்குதித்து ரஜினி அங்கிள்… என பாசம் பொங்க அழைக்கும் மீனாவின் குரலை எளிதில் நம்மால் மறக்க இயலாது. பின் அழகிய இளம் நடிகையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இன்று அவருடைய மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 36 வருடங்களுக்குப் பிறகு அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை மீனா நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் சில புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளார். “அன்புள்ள ரஜினிகாந்த் படம் வெளியாகி 36 வருடங்கள் கடந்துவிட்டது.
தயாரிப்பாளர் தூயவன் அவர்களுக்கு நன்றி. எந்த ஒரு குழந்தை நட்சத்திரமும் மறுக்க முடியாத கதாபாத்திரம் அது. இதயத்தைக் கவரும் ரோஸி கதாபாத்திரத்திற்கு என்னை இயக்குனர் நட்ராஜ் உருமாறினார். அந்த படம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகமூட்டினார் ரஜினிகாந்த்”. லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பு நன்றி. அப்படத்தின் டைட்டில் பாடலான ‘கடவுள் உள்ளமே…’ என்ற பாடலை அவர்தான் பாடினார். அம்மா நீங்கள் பாடுவதை தவற விடுகிறேன் ” என மீனா குறிப்பிட்டுள்ளார். மீனாவின் ராஜாங்கம் இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது. சிவா இயக்கும் “அண்ணாத்த” படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் நடிகை மீனா.