Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, விஜய்க்கு கதை வைத்துள்ள கௌதம் மேனன்… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

இயக்குநர் கௌதம் மேனன் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் விஜய்க்கு கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் . கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியானது . இதனைத் தொடர்ந்து இவர் ஆந்தாலஜி படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இதுவரை இவர் இணைந்து பணிபுரியாத ரஜினி மற்றும் விஜய்க்கு கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Image result for gautham vasudev menon , vijay , rajini

அதில் விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் ரஜினியை வைத்து உணர்ச்சிபூர்வமான படம் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது முழு திரைக்கதையுடன் ரஜினி மற்றும் விஜய்யை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இவர்கள் சம்மதித்தால் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்று கௌதம் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

Categories

Tech |