ரஜினிகாந்த் மற்றும் விஜய் மறுத்த ஹிட்டான படத்தை எண்ணி ரசிகர்கள் இன்றளவும் வருத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் மறுத்து ஹிட்டான படம் தான் முதல்வன். இப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். இப்படம் அர்ஜுனின் வாழ்க்கையிலே மேலே உயர்த்தியது என்று கூறலாம். ஆனால் இப்படத்தில் முதலில் நடிப்பதற்காக ரஜினிகாந்தை தான் இப்பட இயக்குனர் ஷங்கர் தேர்வு செய்தார்.
ஆனால் இப்படத்தில் அரசியல் அதிகமாக இருப்பதால் ரஜினி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.ஏனென்றால் அப்போது ரஜினிக்கு அரசியலில் நல்ல மரியாதை இருந்தது. ரஜினிக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக இருந்தவர் விஜய். அவரிடம் இந்த பட வாய்ப்பு சென்றது.
ஆனால் அப்போது விஜயின் தந்தை திமுகவில் இருந்ததால் விஜயும் இந்த பட வாய்ப்பை மறுத்துவிட்டார். அதன் பின் தான் இந்த பட வாய்ப்பு அர்ஜுனுக்கு கிடைத்தது. ரஜினி மற்றும் விஜயின் ரசிகர்கள் இப்பேர்பட்ட வெற்றிப் படத்தை இவர்கள் மறுத்து விட்டார்களே என்று இன்றளவும் வருத்தப்பட்டு தான் வருகின்றனர்.