ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நலம் பெற வேண்டுமென்று இணையத்தில் ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்த போதிலும் படப்பிடிப்பில் இருந்த 4 பேர் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் தன்னுடைய இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படார்.
தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ரஜினிகாந்த் பூரண குணம் பெற்று தமிழகம் திரும்ப வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணம் பெற்று வரவேண்டும் என்று #RajinikanthHealthCondition, #Rajinikanth, #RajinikanthHealth என்ற ஹாஷ்டேக்குகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.