Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image result for rajini vs pon radhakrishnan

இந்நிலையில் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பாஜகவின் முத்த தலைவரும் , முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். அவர் கட்சி தொடங்கினால் வரவேற்பேன் அதற்க்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரம் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |