Categories
சினிமா

“கன்னட மொழியின் மீதான அன்பை வெளிப்படுத்திய ரஜினி”…. கர்நாடக முதல்வரின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய தொண்டு மற்றும் சமூக பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு அவருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்குவதற்கு பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று நடிகர் ரஜினி தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றார். அவரை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வரவேற்றார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் முதல்வர் பசுவராஜ் பொம்மை ஆகியோர் சேர்ந்து கர்நாடகா ரத்னா விருதை வழங்க புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி அதை பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக முதல்வர் பசுவராஜ் பொம்மை தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் மாபெரும் நடிகர்களானா ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் எங்களுடைய அழைப்பை ஏற்று புனித் ராஜ்குமாரின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். கர்நாடகாவிற்கு வந்து 2 பேரும் கன்னட மொழியில் பேசி கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு என்னுடைய நன்றி என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |