Categories
மாநில செய்திகள்

ரஜினி இன்று மாலை…. வீடு திரும்புவார் – சத்திய நாராயணன் தகவல்…!!

நடிகர் ரஜினி இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவருடைய அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவருடைய டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இந்நிலையில் ரஜினி முழு ஓய்வு எடுக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விரைவில் வீடு திரும்புவார் என்று அவருடைய அண்ணன் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது நலமாக உள்ளார், அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |