ஆஸ்கார் விருதுடன் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் அறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவாகிவந்த அண்ணாத்த திரைப்படம் படப்பிடிப்பு தளத்தில் நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திரை பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் ஆஸ்கார் விருதை வைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அரிதான புகைப்படத்தை இதுவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே ஆஸ்கார் விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.