Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் வேண்டாம்பா ப்ளீஸ்” மகள்கள் கெஞ்சியதால்…. விலகிய ரஜினி?- வெளியான தகவல்…!!

ரஜினியின் மகள்கள் ரஜினியிடம் அரசியல் வேண்டாம் என்று கெஞ்சியுள்ளதால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எப்போது 31ம் தேதி வரும். கட்சி, சின்னம் பெயரெல்லாம் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ரஜினி தற்போது அரசியலில் முழுவதுமாக விலகுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் அதனுடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியும் கொடுத்துள்ளது.

ஏனெனில் ரஜினிக்கு எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மேலும் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், எந்த நோயும் ரஜினியை ஈஸியாக தாக்கி விடும். அப்படி பரவினால் பெரிய ஆபத்தாகி விடும். எனவே அரசியல் குறித்து அதிகமாக சிந்திப்பதால் ரத்தத்தில் மாறுபாடு ஏற்படும். எனவே இப்போதைக்கு வேண்டாம், கட்சிக்காக கூட வெளியே எங்கேயும் போகவேண்டாம் என்று ரஜினியின் மகள்கள் கூறியிருக்கிறார்கள். ரஜினியின் மகள்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினரின் கெஞ்சலுக்கு பிறகு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |