Categories
சினிமா

சோகத்தில் இருந்த ரஜினிக்கு கிடைத்த உற்சாகம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

கடந்த 2021 ஆம் வருடத்தில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் பட்டியலில் ரஜினியின் அண்ணாத்த இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

கொரோனா தொற்றால் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளிவந்து, வசூல் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இரண்டாம் இடத்தில் ரஜினியின், அண்ணாத்த திரைப்படம் இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில்,  சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படமும், நான்காம் இடத்தில் சிம்புவின் மாநாடு திரைப்படமும் இருக்கிறது.

Categories

Tech |