Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல… ஆன்மீகவாதி… கே.எஸ்.அழகிரி அதிரடி…!!!

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு கே. எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தினத்தையொட்டி சென்னையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டி அளித்தார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் அளித்துள்ளார் .புகாரின் மீது நடவடிக்கை எடுத்து கவர்னர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். பா.ஜ.க. அரசு தமிழகத்தில், பெரியார், காந்தி, திருவள்ளுவர் சிலைகளின் மீது காவிசாயம் பூசும் மோசமான நடவடிக்கைகளை செய்து வருகிறது.

பாஜக அலுவலகம் மீது எங்களால் கருப்பு சாயத்தை பூச முடியாதா? அப்படி பூசினால் என்ன செய்ய முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தவறான செயல்களை நாங்கள் செய்ய மாட்டோம். எனவே பா.ஜ.க. தலைவர்கள் இதனை கண்டிக்க வேண்டும். மீறினால் பின்விளைவுகள் நிச்சயம்சந்திப்பீர்கள் .

திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் அனைவரும் மதச்சார்பின்மை எனும் நேர்கோட்டில் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ்,எங்கள் கூட்டணியின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறது. எங்களுக்கு அரசியலில் பங்கு கேட்கும்  உணர்வு இல்லை. திமுக தலைமையிலான எங்களது கூட்டணி தேர் போல மிகவும் பலமாக இருக்கும்.

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல!ஆன்மீகவாதி! ஆவார். அவரால் அரசியலுக்கு வரமுடியாது. அவர் முதலமைச்சராக வர விருப்பமில்லை என்று கூறி கட்சி ஆரம்பித்தால் அவர் மீது விருப்பமுள்ளவர்கள் கூட அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். எனவே ரஜினி அரசியலுக்கு வரமாட்ட என்று செய்தியாளர்கள் பேட்டியின் போது கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Categories

Tech |