நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகள் அழிந்து விடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். அவர் கட்சி தொடங்கினால் வரவேற்பேன் அதற்க்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரம் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரஜினி பாஜகவில் இணைய மாட்டார் என்று அவர் கட்சி ஆரம்பிச்சா என்ன ? பாஜகவில் இணைந்தால் என்ன ? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று அசால்ட் கொடுத்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் ரஜினி பாஜகவிற்கு வந்தாலும், தனியாக கட்சி தொடங்கினாலும் அழியப்போவது மற்ற கட்சிகள்தான் என்று தெரிவித்தார்.