Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை  விட கணிசமான வாக்குகள் பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Image result for Rajinikanth congratulates Kamal

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்கிய 14 மாதங்களில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்ட பேரவை இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

Categories

Tech |