சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
மேலும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 21 தொகுதி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்து கேள்வியெழுப்பிய போது , சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்தார் . மேலும் அவர் மாநில மற்றும் தேசிய கட்சிகளால் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறி விட்டு காரில் ஏறி சென்றார். நாடாளுமன்றம் இல்லை சட்டமன்றம் தான் எங்களின் இலக்கு என்று ரஜினிகாந்த் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.