Categories
சினிமா

ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்…. நிம்மதியடைந்த ரசிகர்கள்…!!

தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று தன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் மகளின் விவாகத்திற்கு பின் யாரிடமும் பேசவில்லை என்றும் வீட்டில் தனியாகவே இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, மகளையும், மருமகனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்தின் மனைவி லதா ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தரான  அன்புசெழியன், தன் மகள் திருமணத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. மகளின் விவாகரத்திற்கு பின் ரஜினி, அதிக கவலையில் இருப்பதாக வெளிவந்த தகவலால் அவரின் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி  ரசிகர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

Categories

Tech |