Categories
சினிமா தமிழ் சினிமா

லெஜெண்ட் சரவணனை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்…. வைரலாகும் புகைப்படம்…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் லெஜெண்ட் சரவணனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை உல்லாசம் விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது முன்னணி நடிகர் ரஜினிகாந்தும் சரவணனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்தனர்.

ரஜினிகாந்த், லெஜண்ட் சரவணன்

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜெண்ட் சரவணாவின் படபிடிப்பும் ஒரே இடத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |