Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் போட்ட அரசியல் புள்ளி… தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்… மாஸாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது என்றும் இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை எம். ஆர். சி நகரில் சாணக்யா யூடியூப் சேனல் முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் நல்ல கண்ணு, குமரி அனந்தன், இல. கணேசன் ஆகியோருக்கு ரஜினி விருது வழங்கினார்.

Image

அதன் பின் அவர் பேசியதாவது, நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது, இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது; இந்த சுழல் வலுவான அலையாக மாற வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும், இது ஆண்டவன் கையில் உள்ளது, அது மக்கள் கையில் உள்ளது அரசியல் அற்புதம் நிகழும் என்று பேசினார்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்சிக்கு ஒருதலைமை ஆட்சிக்கு ஒருதலைமை, இளைஞனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மக்களிடம் எழுச்சி  ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |